முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் K. முபாரக் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில துணைத் தலைவர் B. அப்துல் ஹமீது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் இமாம்.R. ஹஸ்ஸான் பைஜி.,MBA.,LLB., ஆகியோர் கலந்து கொண்டு 161 வது சட்டபிரிவின் படி தமிழக அரசே முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று உரையாற்றினர்.
பள்ளிவாசல் தலைவர்கள் முன்னிலை வகித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி, மாவட்ட அமைப்பு பொது செயலாளர் முகமது சித்திக், மாவட்ட செயலாளர்கள் மதர்.Y.ஜமால், எர்போர்ட் மஜீத், தளபதி அப்பாஸ், மாவட்ட பொருளாளர் Dr.S.பக்ருதீன் உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்



0 Comments