NEWS UPDATE *** காட்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ அதிகாரிகள் முகாம் - தமிழக அரசு அறிவிப்பு! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் !

 

இன்று சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேமுதிக நிறுவனத் தலைவர் - பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரேமலதா தேமுதிக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதும் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார். தேமுதிகவின் நிறுவனத் தலைவராக மட்டுமே இனி விஜயகாந்த் தொடர்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments