தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு லால்குடி ரவுண்டானாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் 69 கிலோ கேக் வெட்டி ஏழைப் பெண்களுக்கு சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை லால்குடி முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.எஸ்.விக்னேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
இவ்விழாவில் நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்


0 Comments