எய்டு இந்தியா (AID INDIA) அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம கல்வி மைய ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் கற்றல் உபகரணங்கள் நிகழ்வு வாளாடியில் நடைபெற்றது.
இலால்குடி ஒன்றியத்தில் கிராமப்புறங்களில் பயிலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான அடிப்படைத் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் செயல்பாடுகளை கிராம கல்வி தொண்டர் மூலம் எய்டு இந்தியா (AID INDIA) அமைப்பு செயல்படுத்தி வருகிறது. 2023-2024 நடப்பு கல்வி ஆண்டிற்கான தமிழ் வாசிப்பு ஆங்கிலம் பேசுதல், நூலகப் புத்தகங்கள் வாசிப்பு செயல்பாடுகள், மழலையர் வகுப்புகள் மற்றும் வீட்டுத் தோட்ட திட்டங்களை செயல்படுத்தும் கிராம கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எய்டு இந்தியா (AID INDIA) ஒன்றிய கருத்தாளர் நான்சி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லால்குடி வட்டார கல்வி அலுவலர் ஐயா க.பிரபு அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கி ஆங்கில பாடத்திட்ட கற்றல் உபகரணங்களை வழங்கினார்.இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் SDG.இளஞ்சேட்சென்னி அவர்கள் கிராம கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கி நூலகத்திற்கான கற்றல் உபகரணங்களை வழங்கினார். எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி ஆசிரியர்களுக்கு தமிழ் வாசிப்பு கற்றல் உபகரணங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியினை திருச்சி மாவட்ட எய்டு இந்தியா (AID INDIA) ஒருங்கிணைப்பாளர் திரு.அவ.ராஜபாண்டியன் பயிற்சி வழங்கி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
0 Comments