NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

இடைநிலை ஆசிரியர்கள் நியமன தேர்வர்கள் கண்ணீருடன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

 இடை நிலை ஆசிரியர்ளை தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தற்போதுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் முழுவதும் அதிகரித்து ஆசிரியர் தேர்வு வாரிய நியமன தேர்வர்கள் கொண்டு நிரப்ப கோரிக்கை விடுத்தனர் . தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேதி 21/7/2024 அன்று நியமன தேர்வின் போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள்  2768 . ஆனால் 2013 முதல் இன்று வரை 12 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் 15 ஆயிரத்துக்கு மேல் உள்ள நிலையில் கூடுதல் நியமன பணியிடங்களை அதிகரித்து நிரப்ப வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்  பேரவையில் அறிவித்ததை போல் 19000 ஆசிரியர்கள் நியமனத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக அதிகரித்து நிரப்ப வேண்டும் என்று கண்ணீருடன் பேட்டி அளித்தனர் . 



முதல்வர் அவர்கள் கவனத்தில் கொண்டு இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

Post a Comment

0 Comments