NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி !

 

சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குமோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. 




காஷ்மீரில் உள்ள பஹல்காமில்  இருக்கும் பைசாரான்  பள்ளத்தாக்கு புல்வெளியில்  ஏப்ரல் 22ஆம் தேதி இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகளும் குதிரை ஓட்டி ஒருவர் என 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.


பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த ஏதும் அறியாதவர்களுக்கு அஞ்சலி செலுத்தி மோட்ச தீப ஏற்றும் நிகழ்வில் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் மனித விடியல் மோகன், ஒயிட் ரோஸ் பொதுநல சங்கத் தலைவர் சங்கர், ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத் தலைவர் மோகன்ராம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாநில நிர்வாக செயலாளர் ரங்கராஜ், மாநில மகளிர் அணி செயலாளர்கள் மகேஸ்வரி,சித்ரா, டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற நிறுவனர் பக்கிரிசாமி, எஸ்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகர், புதிய பாதை அறக்கட்டளை அறங்காவலர் அருணாச்சலம், ஆம்ஸ்ட்ராங் ராபி, மூத்த சமூக ஆர்வலர் கோவிந்தசாமி, கலாம் மாணவர்கள் அமைப்பு மரிய அந்தோணி, தங்கவேல், முனைவர் ஆனந்த் உட்பட பலர்  பங்கேற்றனர்

Post a Comment

0 Comments