NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வேதமந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது,  





மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும், முதல் நாளான இன்று மீனாட்சியம்மன் சன்னதிக்கு முன்னாள் உள்ள தங்க கொடி மரம் வண்ண வண்ண மலர் அலங்கரிக்கப்பட்டிருந்தது, 


சிவாசாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள்ளாக மிதுன லக்னத்தில் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திர முழங்க தங்கக் கொடி மரத்தில் கொடியினை ஏற்றி திருவிழா தொடங்கியது. 


முன்னதாக மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் தங்கக்கொடி மரம் முன்பாக  எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.கொடியேற்றத்தின் பொழுது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்,  


மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று துவங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. 


தங்க ரிஷபவாகனம், வெள்ளி ரிஷப வாகனம், தங்கபல்லாக்கு,  வெள்ளி சிம்ம வாகனம், காம தேனு வாகனம், தங்கக் குதிரை வாகனம்,தங்கப் பல்லாக்கு என பல்வேறு வாகனங்களி எழுந்தருளி வீதி உலாவாக மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர்.


இதில் முக்கிய திருவிழாக்களான மீனாட்சியம்மம் மதுரை அரசியாக  பட்டாபிஷேக நிகழ்வு மே 6-ஆம் தேதி இரவு 7:35 மணி முதல் 759 மணிக்குள்ளாக விருச்சிக லக்னத்தில் நடைபெறுகிறது.


 மே-7ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திக்கு விஜயம். மே-8ம் தேதி காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்கு உள்ளாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. மே-9-ம் தேதி திருத்தேரோட்டம் நான்கு மாசி வீதிகளில் நடைபெறும். மே-10 தேதி வெள்ளி ரிஷப வாகனத்துடன் மீனாட்சி  திருவிழா நிறைவு நடைபெறுகிறது. 



இதற்காக நான்கு மாசி வீதிகளிலும் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு மக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தேவையான வசதிகளை மதுரை மாநகராட்சி செய்து வருகிறது. 


இந்நிகழ்வில் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்  குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆட்சியாளர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், காவல் ஆணையாளர் லோகநாதன், மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்,

Post a Comment

0 Comments