NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

2024 மாதம் குரூப் 4 தேர்வு - ஐனவரியில் தேதி அறிவிப்பு !

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுதிட்டத்தை வெளியிட்டு வருகிறது.




இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள துறை சார்ந்த தேர்வுகள் குறித்தும் குரூப்- I, II, IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்தும் விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், ஆண்டின் எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு (Notification) வெளியாகும், தோராயமான காலியிடங்கள், அதற்கான தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும்.


இந்த நிலையில் நேற்று மாலை 2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.


அதில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும். குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெறும். இந்த குரூப் 4 தேர்வைத்தான் லட்சகணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். குரூப் 1 தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments