திருச்சியில் நான் முதல்வன் கல்லூரி கனவு -2024 நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சிதலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12 ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல் , கலை அறிவியல் , பொறியியல் , அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகளில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது . மேலும் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் வீடியோ கட்சிகள், உயர்கல்வியில் சாதித்த மாணவ மாணவிகளின் அனுபவ பகிர்வு , உயர்கல்வி பயில வங்கிகடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தகவல் வழங்கப்பட்டது .
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தி ஆயிரம் மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவர் . முதல்நிலை தேர்வு வரை 10 மாதங்களுக்கு மாதம் ரூ7500/- வழங்கப்படும் . முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ25000/- ரொக்கமாக வழங்கப்படும். இது அல்லாமல் நிதி உதவியுடன் சேர்ந்து சிறந்த பயிற்சிகளும் வழங்கப்படும் .
இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்
L.பாபு
திருச்சி செய்தியாளர்
0 Comments