திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல்பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த
நிலையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவை சேர்ந்த
பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு
படித்து வந்தார். இந்த நிலையில் தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி
வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும்
காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார்.
தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார் ஆனால் விடுமுறை
எடுக்கக் கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என
தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி
உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும்
விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்ப்பால் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து
விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை
உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை
செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.
மேலும் இறந்த தாரணியை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக
தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச்
செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில்
கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல்
காத்திருக்க வைத்துள்ளனர். நெடு நேரத்திற்கு பின் தாரணி இறந்துவிட்டார் என விடுதி
நிர்வாகம் தெரிவித்துள்ளது, இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி
உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி
நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். இதற்கு உரிய விசாரணை வேண்டு என தனலட்சுமி
சீனிவாசன் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள். காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த மாட்டார்கள் என குற்றம் சாட்டி கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்
இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை
நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின்
கழுத்தில் பெல்ட்டால் கழுத்தை நெறித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை
வேண்டும் என்றும், காவல்துறையிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டதால் இதனால் கல்லூரி வளாகத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட
போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தனது மகள் இறப்பிற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்
என தெரிவித்தனர்.
0 Comments