google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 மக்கள் உரிமை கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
NEWS UPDATE *** ஆக.1 முதல் 14 தேதி வரை, 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கம் தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மக்கள் உரிமை கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

மக்கள் உரிமை கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது .






திருச்சி காவேரி ஆற்றில் இருந்து இராமநாதபுரம் வரை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வழித்தடத்தில் அளுந்தூர் (1500 ஏக்கர்), மாத்தூர் (400 ஏக்கர்), அம்மாப்பேட்டை(625 ஏக்கர்),  இனாம் குளத்தூர் (1500 ஏக்கர்), நாகமங்கலம் (780 ஏக்கர்), சேதுராப்பட்டி (925 ஏக்கர்) ஆகிய 6 கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கட்டுப்பட்ட குளங்கள் நீர் ஆதாரங்களாக உள்ளன. சுமார் 5730 ஏக்கர் நிலம் திருச்சி  புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த போது நீர்வளத் துறையில் இருந்து உண்மைக்கு மாறான தகவல்களை கொண்ட பதில் அளித்துள்ளனர் இது விவசாயிகளை திட்டமிட்டு ஏமாற்றும் செயல் என்பதால் அதை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை கூட்டணியின் மாவட்ட செயலாளர் முகமது காசிம் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் தென்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார் 


முன்னதாக மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாநகர தலைவர் வின்சென்ட் ஜெயக்குமார் மாநகராட்சி மற்றும் துப்புரவு பணியாளர்கள் நல சங்க மாவட்ட செயலாளர் கு.வீரன் மனித உரிமை பாதுகாப்பு சங்க பஷீர் கட்டளை வாய்க்கால் சங்க பொறுப்பாளர் பழனிச்சாமி ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு சம்சுதீன் மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் ஜீவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்



***


L.பாபு 
திருச்சி மாவட்ட செய்தியாளர் 



 






Post a Comment

0 Comments