NEWS UPDATE *** பணிச்சுமை என நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு ஆடியோ அனுப்பிய தலைமைக் காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

ரயில் டிக்கட் கட்டணத்தை திருப்பி தரக்கோரி ரயில் நிலைய வாசலிலேயே படுத்து மறியல் செய்யப்போவதாக அய்யாக்கண்ணு பேட்டி !

தேசிய நதிகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் விவசாயிகளின் போராளி அய்யாக்கண்ணு தனது குழுவினருடன் இன்று டெல்லி செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்ற பொழுது காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டு அவர் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.







 இன்று திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தவர் நாங்கள் டெல்லிக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து டிக்கெட் எடுத்து சென்னை வரை சென்றோம் எங்களை அவர்கள் திருப்பி அனுப்பி விட்டார்கள் எங்களுடைய ரூபாய் ஒரு லட்சத்தை 50 ஆயிரத்தை அவர்கள் உடனடியாக திருப்பித் தரா விட்டால் ரயில் நிலைய வாசலிலேயே படுத்து மறியல் செய்வோம் என்று கூறினார் இதனால் திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்ஷனில் இன்று பரபரப்பான சூழல் காணப்பட்டது


**********

 

L.பாபு

தலைமை செய்தியாளர்


Post a Comment

0 Comments