திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் செக் போஸ்ட் அருகே உள்ள அழகிரிபுரத்தில் வசித்துவந்தவர் (லேட்) செங்கோடன் என்பவரின் மகன் செல்வராஜ் தீபாவளி பண்டு சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்ததின் பேரில் நிறைய பேரிடம் பணம் வசூல் செய்துள்ளார் . மேலும் வட்டி அதிகம் தருவதாக கூறி பலபேரிடம் கடனும் வாங்கி தொழில் நடத்தியிருக்கிறார் .
அழகிரிபுரத்தில் வசிக்கும் சிலம்பரசன் என்பவரிடம் மட்டும் சுமார் ரூபாய் 4,15,000/- பணம் பெற்றுள்ளார் . மேலும் இதுபோன்று பலரிடம் பணம் பெற்றுள்ளார் . இதுவரை யாருக்கும் எந்த பணமும் திருப்பி தரப்படவில்லை . சுமார் 1.5 கோடி வரை ஏமாற்றபட்டதாக பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகின்றனர் .
இப்படியிருக்க கடந்த 10.03.2023 அன்று மாலை பழூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு இறந்துவிட்டார் . அவரது இறப்புக்கு பின்னர் பணம் கொடுத்த பல நபர்கள் ஒன்று சேர்ந்து அவரது மனைவி கீதாவிடம் சென்று கேட்டிருக்கின்றனர். அதற்க்கு இரண்டு மாதத்திற்குள் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாக கீதா , அவரது மகன் ஹேம்நாத் , கீதாவின் தந்தை பால்ராஜ் ,தாயார் வாக்குறுதி தந்திருக்கிறார்கள் .
இது சம்பந்தமாக சமயபுரம் காவல்நிலையத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் செய்தபோது பணம் திரும்ப தருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் இப்போது பணம் திரும்ப கொடுக்கமுடியாது என கீதா சொல்கிறார் . No 1 டோல்கேட் பழூர் மாடக்குடி சரஸ்வதி கார்டனில் ஒரு வீடும் , அழகிரிபுரத்தில் ஒரு வீடும் மற்றும் பல்வேறு இடங்களில் வீட்டுமனைகளும் சொந்தமாக செல்வராஜ் பெயரில் சொத்துக்கள் உள்ளதாக தெரிவது கூடுதல் தகவல் .
எனவே இது சம்பந்தமாக பணத்தை திரும்ப பெற்றுதரக்கோரி இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்திருக்கின்றனர்.
***
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments