31/07/2024
மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் சார்பில் திருநெடுங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் காசநோய் இல்லாத தமிழகம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளியின் ஆசிரியர் திருமதி வி.உஷாராணி (பட்டதாரி ஆசிரியர்) அவர்கள் வரவேற்று பேசினார்.
கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் இயற்கை பேரழிவில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் எ.சுரேந்திரக்குமார் அவர்கள் தலைமையில்.காசநோய் பற்றிய விழிப்புணர்வை திருமதி ரா.கீதா லெட்சுமி திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திருமதி ம.முத்துச்செல்வி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்த்தினர்.
மக்கள் உரிமைகள் சமூக பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் தலைவர் டி.செல்வராஜ்.துணைத்தலைவர் திருமதி இ.ரூபாதேவி மற்றும் த இ.அருண், திருமதி வா.ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சின் நிறைவில் திருமதி.எஸ்.அருட்செல்வி நன்றியுரை கூறினார்.
**********
தலைமை செய்தியாளர்
0 Comments