திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி ஜெயக்குமார் ஏற்பாட்டில் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய உறுப்பினர் உரிமை அட்டையை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி கழக நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் டி.பி. பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் அ. திருநாவுக்கரசு, சிறுபான்மையினர் நல பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். புல்லட் ஜான், மாணவரணி மாவட்ட செயலாளர் டி. அறிவழகன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஜி. ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெள்ளூர் பி. நாகராஜ், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் க. ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சமயபுரம் டி. ராமு, ஒன்றிய கழக செயலாளர்கள் வி. ஆதாலி, ஆமூர் எஸ். ஜெயராமன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சண்முகா பி. வடிவேல், சண்முகா பி. வடிவேலு, வடக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் எட்டரை த. அன்பரசு, புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட துணை தலைவர் வி.பி. முருகேசன், சமயபுரம் பேரூர் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை தலைவர் எஸ். நடராஜமூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வெற்றிச்செல்வி, முசிறி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பி. தனபால், தலைவர் ஆமூர் எம். சுரேஷ்ராஜா, மற்றும் நிர்வாகிகள் விமலா எம். செந்தில்குமார், துரை மணிமாறன், மணல் குணா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
**********
தலைமை செய்தியாளர்
0 Comments