google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 கார்கில் போரின் 25ம் ஆண்டு வெற்றி விழாவை முன்னிட்டு மேஜர் சரவணன் நினைவகத்தில் 52 அடி உயரமுள்ள தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது !
NEWS UPDATE *** வக்ஃபு மசோதா - நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

கார்கில் போரின் 25ம் ஆண்டு வெற்றி விழாவை முன்னிட்டு மேஜர் சரவணன் நினைவகத்தில் 52 அடி உயரமுள்ள தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது !

 

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25ம் ஆண்டு வெற்றி விழாவை  முன்னிட்டு அப்போரில் 4 எதிரிகளை நேருக்கு நேர் சண்டையிட்டு அவர்களது முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு அப்போரின் வெற்றிக்கு வித்திட்டு முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்த    “ஹீரோ ஆஃப் பாட்டாலிக்” மேஜர் சரவணன், வீர் சக்ரா -அவர்களது நினைவகத்தில் சுமார்  52 அடி உயரமுள்ள 24 மணி நேரமும் பட்டொளி வீசி பறக்கக்கூடிய நமது தேசியக்கொடிகம்பம் தமிழக அரசின் முறையான அனுமதிபெற்று  மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளை சார்பாக  நிறுவப்பட்டு உள்ளது.  தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி, மேஜர்  சரவணனின்  52 வது பிறந்த தினமான 10.08.2024, சனிக்கிழமை அன்று சரியாக காலை 08.00  மணிக்கு  கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது . 










மேஜர் ஜெனரல் இந்திரபாலன் (ஓய்வு), முன்னாள் தக்ஷிண்ய இராணுவ  பிராந்திய தலைவர்  மற்றும் NCC UDAAN அமைப்பின் தலைவர் முன்னிலை வகிக்க  , திருச்சி NCC மாணவர்  படை தலைவர்  கர்னல் . Y.விஜயகுமார்  ஆகியோர்  கௌரக விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்  . மேலும் மத்திய மற்றும் மாநில அளவிலான  இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .

**********

 
L.பாபு

தலைமை செய்தியாளர்

Post a Comment

0 Comments