கும்பகோணம் மறை மாவட்டம் திருச்சி லால்குடி ரவுண்டானாவில் பட்டியலினத்தார்/ பழங்குடியினர் பணி குழு நடத்தும் ஆகஸ்ட் 10 துக்க நாள் அனுசரிப்பு சமூக நீதிக்கான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மறை மாவட்ட பட்டியலினத்தார்/ பழங்குடியினர் பணி குழு செயலாளர் அருள் பணிA. இருதயராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு பேரருள் முனைவர் M. பிலோமீன் தாஸ் அவர்கள் தலித் கிறிஸ்துவ மக்களை எஸ்/சி பட்டியலில் சேர்க்கக் கோரி ஒன்றிய அரசை எதிர்த்து கண்டன உரையாற்றினார் .
தமிழக முதலமைச்சர் 40 தொகுதி எம்.பியும் பாராளுமன்றத்தில் தலித் கிருத்துவ மக்களை எஸ் /சி பட்டியலில் சேர்க்க கோரி அழுத்தம் கொடுக்கவும் அவர்களுக்கான இட ஒதுக்கிடை வழங்கிடவும் பேசினார். தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாகவும் தலித் கிறிஸ்துவ மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தாமல் அவர்களுக்கான ,இட ஒதுக்கீடு வழங்கிடவும் கண்டன உரையை கொடுத்தார்.
தலித் கிருத்துவ மக்கள் மன்ற கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஒன்றிய அரசை எதிர்த்து கோரிக்கை கண்டன முழக்கமிட்டனர் . ராமநாதபுரம் காட்டூர் பங்குத்தந்தை ஜோசப் கிறிஸ்துராஜ் அவர்கள் தலித் கிறிஸ்துவ மக்கள் மதம் மாறியதால் ஒன்றிய அரசு Sc பட்டியலில் சேர்க்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதையும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து. எதிர்காலத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதாகவும் கருத்துரை வழங்கினார்.
சமூக எழுச்சி பாடல் பட்டியல் போடவா தலித் கிறிஸ்துவ பெண்கள் மன்ற பொறுப்பாளர்கள் லால்குடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மையக்கருத்து கருத்தாளர்M. ஜெயசீலன் சி.பி.எம் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் போராட்டத்தில் வருகை புரிந்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். தலித் கிறிஸ்துவ மக்கள் எஸ்/ சி பட்டியலில் சேர்க்கக் சேர்க்க கோரி ஒன்றிய அரசு எதிர்த்து கண்டன உரை கொடுத்தார்.
ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தலித் கிருத்துவ மக்களை எஸ் சி பட்டியலில் சேர்க்கக் கோரும் வழக்கை கிடப்பில் போட்டிருப்பதையும் பற்றியும் பேசினார். தலித் கிறிஸ்துவ மக்களின் போராட்டம் அதன் வரலாறு விழிப்புணர்வு கருத்துக்கள் கொடுத்தார் .சி.பி.எம் கட்சி தலித் கிறிஸ்துவ மக்களுக்கான போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதையும் கண்டன உரை கொடுத்தார். ஒன்றிய அரசை எதிர்த்து நமது மக்கள் வலிமையாக போராட்டம் இருக்கவும். தலித் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் இணைந்து எதிர்வரும் காலங்களில் திருச்சபையும் பணிக்குழு, தோழமை இயக்கங்களும் அமைப்புகளும் இணைந்து ஒன்றிய அரசு எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் ஒருங்கிணைப்பு செய்யவும் பேசினார். போராட்டத்தில் முதல் படியாக உச்ச நீதிமன்றத்தில் சூசை வழக்கை உதாரணம் காட்டி கருத்துரை வழங்கினார்.
தஞ்சை முகிலன் பொறியாளர் வி.சி.க கட்சி திருச்சபையில் உள்ள தீண்டாமை பாகுபாடுகள் களையவும் தலித் கிறிஸ்துவ மக்கள் உள்ளாட்சி அமைப்புகளிலும் அரசியல் அதிகார படுத்தப்படவும் . தலித் ஆயர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் திருச்சபையில் தலித் கிறிஸ்துவ மக்கள் சமத்துவத்துடனும் மனித மாண்புடனும் நடத்தவும் .கல்வி நிலையங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கவும் விழிப்புணர்வு கருத்துக்கள் கொடுத்தார் .
அதனைத் தொடர்ந்து நடுமண்டல ஒருங்கிணைப்பாளர் களப்பணியாளர் எலிசபெத் ராணி தமிழரெல்லாம் மானத்தோடு சமூக எழுச்சி பாடலை பாடினார் . போராட்டத்தில் கலந்து கொண்ட மறை மாவட்ட முதன்மை குரு ,மறை மறைவட்ட முதன்மை குரு ,மறைமாவட்ட குருக்கள், கன்னியர்கள் மற்றும் கும்பகோணம் மறை மாவட்டத்தில் ஆறு மறை வட்டத்தில் வருகை புரிந்துள்ள அனைத்து தலித் கிறிஸ்துவ மக்களும் கிராமப் பொறுப்பாளர்கள், மக்கள் மன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மறைமாவட்ட கண்காணிப்பு குழு, உறுப்பினர்கள் இயக்கத் தோழர்கள் பிற கட்சி அனைவருக்கும் மண்டல ஒருங்கிணைப்பாளர் செல்வன் தமிழரசன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
போராட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்தது நடுமண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் களப்பணியாளர் அந்தோணி பிராங்கிளின் திருமதி எலிசபெத் ராணி திருமதி சுமதி.
சுமார் 200 க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்
0 Comments