google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் !
NEWS UPDATE *** ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சி.சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் !

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் மாதவா பெருமாள் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ஜோஸ்மின் தலைமையில் 31.08.24 அன்று  நடைபெற்றது. 







பள்ளி மேலாண்மைக் குழு மாநில முதன்மை கருத்தாளர் முனைவர் பிரபு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் நோக்கம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் ஒன்றிய கருத்தாளர் இளவரசி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் விவரம் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்கள். 

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்ட முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக நளினி துணை தலைவராக மகாலட்சுமி உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments