திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 78 வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ணபலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார். மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, காவல்துறை , மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணித்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாக பணியாற்றிய 329 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
0 Comments