உறையூர் வாத்துக்கார தெருவில் உள்ள பழமையான கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மரம் ஒன்று உள்ளது, அந்த தெருவில் உள்ள இந்து மக்கள் அனைவரும் தினம் மற்றும் மாதந்தோறும் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில் அதன் அருகில் உள்ள கார்த்திக் மற்றும் அதன் அருகில் உள்ள பாலசுப்ரமணியன் (வாத்தியார் )அவர்களும் சமீப காலமாக கோயில் இடத்தில் வாகனம் நிறுத்துவது மட்டும் அல்லாமல் ஆக்கிரமிப்பும் செய்து வருகின்றனர் .
இதனால் அப்பகுதி மக்கள் உறையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர் .
அப்போது அவர்கள் கூறியதாவது ....
நாங்கள் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை .மேலும் அவர்கள் தற்போது வேப்ப மரம் அருகில் சூடம் ஏற்றும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைப்பதால் சாமி கும்பிட முடியவில்லை என்றால் தீ குளித்து சாவுங்கள் என்று கார்த்திக் மற்றும் பாலசுப்ரமணியன் சொல்கின்றனர் . இந்நிலையில் தெருவாசிகள் கேட்டபொழுது நீங்கள் யாரிடமும் வேண்டுமானாலும் சொல்லுங்கள் நாங்கள் பார்த்துகொள்கிறோம் என்று அதிகாரம் செய்தனர்.
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments