மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு தலைமையிலும், மாவட்ட அவைத்தலைவர் மிர்பஹா ஷேக் தாவூத் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி ஷரீப் கலந்து கொண்டார்.
இதில் கிளை கட்டமைப்புகள் குறித்தும், ஒரு சில வாரங்களில் மாவட்டத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி Ex.MLA அவர்கள் பங்கேற்கும் முப்பெரும் விழா முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
0 Comments