google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 181ஆவது ஆய்வு !
NEWS UPDATE *** விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து நாங்கள் கருத்துக்கூற முடியாது - மன்னராட்சி அகற்றப்பட வேண்டுமென்ற ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 181ஆவது ஆய்வு !

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234/77 ஆய்வுப் பயணத்தின் 181ஆவது ஆய்வை பழனி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொண்டார். 




234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறையின் கீழ்  இயங்கும் பள்ளிகள், நூலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார். அதன்படி பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  




சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் அவர்களின் பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். 




பள்ளி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தமிழ்க் கூடல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பு தேசிய மாணவர் படை முகாமில் செயலாற்றிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார். காலை வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனச் சிதறல் இல்லாமல் பயில வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கான வெந்நீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கையை  முன் வைத்தார்கள் ஆசிரியர்கள். இந்நிகழ்வில் நகர்மன்ற  துணைத் தலைவர் மாயக்கண்ணன் அவர்களும் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments