மறைந்த தமிழன் டிவி திருச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விக்னேஸ்வரன் படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி டிவிஎஸ் டோல்கேட், செங்குளம் காலனி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் தமிழன் தொலைக்காட்சி முதன்மை செய்தியாளரும், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவருமான சகாயராஜ் கலந்து கொண்டு விக்னேஸ்வரன் திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழன் தொலைக்காட்சி ஊழியர்கள் பங்களிப்பாக திரட்டப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் தாயாரிடம் சகாயராஜ் வழங்கினார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த விக்னேஸ்வரனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
0 Comments