திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாரிஸ் தியேட்டர் ரெயில்வே பாலம் 157 ஆண்டு பழமையானதாகும்.ரூ 34.10 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. ஆனாலும் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றம் சாட்டி அதிமுகவினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் கடுமையான வரி உயர்வு,மக்களின் அடிப்படை தேவைகளான சாலை,குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து,திருச்சி மரக்கடை,எம்ஜிஆர் சிலை அருகே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. செயலாளரும். முன்னாள் துணை மேயருமான ஜெ .சீனிவாசன் தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் போலீசாரின் அனுமதியின்றி இந்தகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திருச்சி மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
போலீசாரின் முன் அனுமதியின்றி இந்த போராட்டம் நடைபெறுவதால் போலீசார் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிமுகவினரை கைது செய்ய முற்பட்டனர். அப்போது ஆர்.பி. உதயகுமார் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.பின்னர் ஆர்பி உதயகுமார்,ஜெ சீனிவாசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மனும், பேரவை மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன், அவைத் தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம்,மாவட்ட இணைச் செயலாளர்,ஜாக்குலின் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், வெல்லமண்டி பெருமாள், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, பேரவை தலைவர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி, மகளிரணி மாவட்ட அணிச் செயலாளர்கள் நசீமா பாரிக், மர் மன்ற செயலாளர் கலிலுல் ரகுமான் , பாலாஜி, ஞானசேகர், ஜோசப் ஜெரால்டு, ஏடிபி ராஜேந்திரன், ஜான் எட்வர்டு குமார் , ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, தென்னூர் அப்பாஸ், பாசறை இலியாஸ், சகாபுதீன் பகுதி செயலாளர்கள் : அன்பழகன், சுரேஷ்குப்தா, என்.எஸ் பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, ரோஜர், கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன், மகளிர் அணி நிர்வாகி மற்றும் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ,
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், கெளசல்யா, முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், மற்றும் வக்கீல்கள் சுரேஷ்,சேது மாதவன் மாவட்ட அணி நிர்வாகிகள் நாட்ஸ் சொக்கலிங்கம், மாவட்ட பேரவை இணைச் செயலாளர்கள் என்ஜினியர் ரமேஷ், தினேஷ் பாபு, கங்கைமணி, கருமண்டபம் சுரேந்தர், ரஜினிகாந்த், ஆடிட்டர் ரவி, சகா. திருநாவுக்கரசு, பாலக்கரை சக்திவேல், சாத்தனூர் செல்வராஜ், கல்லுக்குழி மனோஜ் குமார், என்ஜினியர் கிருஷாந்த், எனர்ஜி அப்துல் ரகுமான், கே.டி. அன்புரோஸ், கே.கே.நகர் சதீஷ்குமார்,
இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார், மீனவர் அணி தலைவர் ஆதவன், வாழைக்காய் மண்டி சுரேஷ் குமார், தென்னூர் ஷாஜஹான், பாசறை பரத்குமார், புத்தூர் சதீஷ்குமார்,நிர்வாகிகள் காசிபாளையம் சுரேஷ் குமார், பொன். அகிலாண்டம், MGR மன்ற இணை செயலாளர் அப்பாகுட்டி (எ) அப்துல் ரஹ்மான்,டிபன் கடை கார்த்திகேயன்,வசந்தம் செல்வமணி, தர்கா காஜா, கல்லுக்குழி முருகன், எடத்தெரு பாபு, கே.பி. ராமநாதன், ஜெயக்குமார், செல்லப்பா, அரப்ஷா, சந்தோஷ் ராஜ், வாசவி நவநீதன், மார்க்கெட் பிரகாஷ், குருமூர்த்தி, புத்தூர் ரமேஷ், உறையூர் சாதிக், பிரபாகரன், கருமண்டபம் வெங்கடேசன், சாத்தனூர் சதிஷ்குமார், ஆசைத்தம்பி, வண்ணாரப் பேட்டை ராஜன், பாலக்கரை ரவீந்திரன், உடையான் பட்டி செல்வம், ரமணிலால், கேபி ராமநாதன், ஜெயகுமார், டைமண்ட் தாமோதரன் , ஐ.டி பிரிவு நாகராஜ், கே.டி.ஏ. ஆனந்தராஜ், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், குருமூர்த்தி, ஆரி, ஜெபா, பொம்மாசி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன் , எம்.ஜே.பி. வெஸ்லி,கட்பீஸ் ரமேஷ், கயிலைகோபி, என்.டி. மலையப்பன், கே.சி.பி .மோகன், ஆனந்த் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காதது தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட அதிமுக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு ள்ளனர்.
0 Comments