google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 டிசம்பர் 5 உலக மண் தினம்
NEWS UPDATE *** ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சி.சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

டிசம்பர் 5 உலக மண் தினம்

டிசம்பர் 5 உலக மண் தினத்தில் திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினாவில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் நமது இயற்கை வளத்தில் மண் வளம் மிக முக்கியமானது அதை பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடற்கரையில்  பிளாஸ்டிக் பைகள் தவிர்த்து  கடல் வளத்தையும் கடலில் உள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வளம் அதில் வாழும் உயிரினங்கள்  மோசமாக பாதிக்கபடுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை கடற்கரையில் பயன்படுத்துவதை தவிர்க்க  வேண்டும் 



மேலும் இப்படி கடற்கரை பகுதிகளை நாம் பாதுகாக்க தவறிய தன் விரைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை சேலம் கிருஷ்ணகிரி பகுதிகளில் பெரும் மழை பொழிந்து  பாதிப்பை ஏற்படுத்தியது இது போன்ற இயற்கை  பாதிப்புகள் உருவாக நாமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து அனைவரும் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை என்றும்  விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்தனர்.





நிகழ்வில் மாற்றம் அமைப்பின் சார்பில் மக்கும் வகையிலான பைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில்  வழக்கறிஞர் ஸ்டான்லி வழக்கறிஞர் அப்துல் ரசாக் மாணவர் மன்றத்தை சேர்ந்த ஜீவா அலெக்ஸாண்டர் ஜோஷ்வா பிரபு மார்க்ஸ் இஸ்லாம் பாண்டியன் இக்பால் தமிழ் வேந்தன் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய மாநில விருது பெற்ற குறும்பட நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Post a Comment

0 Comments