google.com, pub-9454156898543155, DIRECT, f08c47fec0942fa0 திருச்சிராப்பள்ளி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்சாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
NEWS UPDATE *** வக்ஃபு மசோதா - நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சிராப்பள்ளி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமதித்த மத்திய அமைச்சர் அமித்சாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

 

நாடாளுமன்ற அவையில் இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் சொன்னவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதை கேலியாக சித்தரித்து,  மாநிலங்களவையில் காழ்புணர்ச்சியுடன்  உள்துறை அமைச்சர் அமிஷா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.




இதனைக் கண்டித்து அனைத்துக் கட்சி முற்போக்கு இயக்கங்களின் ஒத்துழைப்புடன்  #தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அரை கூவல் விடுத்தார்.


அவரது அறிவிப்பின்படிதிருச்சிராப்பள்ளி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவமதித்த அமித்சாவே #மன்னிப்பு_கேள்...!

#பதவி_விலகு...!! - என்ற கோரிக்கை முழக்கத்துடன் வெள்ளிக்கிழமை (2024-12-20) திருச்சி-திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் ராகவேந்திரா வளைவு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடந்த கண்ணன் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் க.செகநாதன், மாநகரத் தலைவர் வின்சென்ட் ஜெயக்குமார்.J, மகஇக மாவட்ட செயலாளர் ஜீவா, காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜவகர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் பொன்இளங்கோ, சமூக ஆர்வலர் சம்சுதீன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். 


ஐ என் டி யு சி வடிவேல், காங்கிரஸ் சிவாஜி சண்முகம், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், தேவராஜ், வினோத், திலீபன், திராவிடர் விடுதலை கழக அசோக்,  மக்கள் அதிகாரம் சரவணன், மக்கள் உரிமை கூட்டணி முகமதுகாசிம், கார்த்திக், இந்தியா ஒற்றுமை இயக்கம் இளைஞர் அணி மாநில செயலாளர் அசாருதீன், திமுக மதிமுக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் மற்றும் வழக்கறிஞர் அணி தோழர்கள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியின் முடிவில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் சீனிவிடுதலைஅரசு இறுதியாக கண்டன உரையாற்றினார்.

Post a Comment

0 Comments