NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாட்டம் !

 திருச்சியில்  தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள  (ஜோக்கிம் அன்பகம்) ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன்  கிறிஸ்துமஸ்  தினவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது 




இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ் அவர்கள் தலைமையேற்று குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் 







சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற குறும்பட நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ்  பாபு வழக்கறிஞர் கார்த்திகா இறகுகள் அகாடமியின்  நிர்வாகி மரியா மெர்சி பொற்கொடி சமூக செயற்பாட்டாளர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் குழந்தைகளுக்கு  கிறிஸ்மஸ் தாத்தா பரிசுகளை வழங்கினார் நிகழ்ச்சியில் குழந்தைகள்  பல்வேறு பாடல்களுக்கு  நடனம் ஆடி மகிழ்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் வர இருகின்றன 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் உணவுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாய் நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹப்சி சத்தியாராக்கினி அவர்கள் தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர் நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க்  பயிலும்  கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments