NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் 76வது குடியரசு தினத்தில் கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு !

திருச்சியில் 76வது குடியரசு தினத்தில் சின்ன கடை வீதியில் உள்ள கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



 திருச்சி  மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அவர்களது சேவையை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டு வருகிறது இந்த 2025 ம் ஆண்டு ஜனவரி 26  குடியரசு தினத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருவதற்க்காக சமூக செயற்பாட்டாளர்கள் ராதாகிருஷ்ணன் சீனிவாசபிரசாத் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி தாய் நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் ஹெப்சி சத்யாராக்கினி அபிராமி பியூலா ஜான்சி சாலைபயணீட்டாளர் நல குழு அய்யாரப்பன் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் தலைவர் சங்கர் சாக்ஸிடு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த குடும்ப நல ஆலோசகர் சசி மற்றும் ரேவதி கோமதி இறகுகள் அறக்கட்டளையின் நிர்வாகி மரியா மெர்சி பொற்கொடி தின சேவை அறக்கட்டளை தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் நிறுவனர் தலைவர் சிவபிரகாசம் பகவதி கண்ணன் தமிழ் குரல் அறக்கட்டளை யின் நிர்வாகிகள் ரபிக் அகமது லிவிங்ஸ்டன் தாஸ் தேசிய மாநில விருது பெற்ற குறும்பட நடிகர் இயக்குனர் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர். ஏ. தாமஸ் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கார்த்திகா உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அவர்களின் சேவையை பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.








 இந்நிகழ்வில் கோபால் தாஸ் ஜுவல்லரி நிர்வாகத்தின் சார்பில் மேலாளர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் முன்னதாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டது

Post a Comment

0 Comments