NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் முஸ்லிம் மாணவர் பேரவை MSF உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

 

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - FSO சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருச்சியில் முஸ்லிம் மாணவர் பேரவை MSF உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இன்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலத் தலைவர் ஏ.எம்.எச்.அன்சர் அலி, எம்.எஸ்.எப். நிர்வாகிகள் வி.மைதீன் சிராஜுதீன், எஸ். முஹம்மது யூசுப், எம்.முஹம்மது அன்வர், ஆசிக் அலி மற்றும் என்.கே. அமீருதீன், ஜி.எச்..சையது முஸ்தபா, பி. அப்துல் சலாம், அரியமங்கலம் முஸ்தபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments