மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்ன் சி எஸ் ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சி) மதுரை விஷால் டி மால் & மேல மாசி வீதி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள 42 அரசு பள்ளிகளை சேர்ந்த 301 மாணவிகளுக்கு சி எஸ் ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மலபார் குழுமம்) சார்பாக மொத்தம் சுமார் ரூபாய் 24 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலையை மாணவிகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் வழங்கினார்,
இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர் கதிர் முகமது, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை விஷால் டீ மால் கிளை தலைவர் நிஷாந்த், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மதுரை மேலமாசி வீதி கிளை தலைவர் சிஹாபுதீன் ஆகியோர் உடன் இருந்தனர், மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூக பொறுப்பின் முன்முயற்சிகள் மற்றும் இதரகாரணங்கள் ஆகும், தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்புள்ள திட்டங்களுக்கு செலவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
0 Comments