NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்து இருந்த கைக்குழந்தைக்கு மிகச்சிக்கலான நியூரோ எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சை

 


தென் தமிழகத்தின் நரம்பியல் மற்றும் விபந்து சிகிச்சைக்கு பலராலும் பரிந்துரைக்கப்படும் முன்னணி மருத்துவமனையான ஹானா ஜோசப் மருத்துவமனையின் மருத்துவர்கள், 9 மாத ஆண் கைக்குழந்தைக்கு முளை அணியுரிசம் (Brain Aneurysm) கட்டி வெடித்து இருப்பதை ஆஞ்சியோகிராம் (Angiogram) மூலம் கண்டறிந்து அக்குழந்தைக்கு மிகச்சிலான உயிர் காக்கும் நியூரோ எண்டோவாஸ்குலர் (Neuroendovascular) அறுவை சிகிச்சையை பலூன் அசிஸ்ட்ட் காயில் (Balloon-Assisted Colls) மூலம் வெற்றிகரமாக செய்து சாதனை புரிந்துள்ளnt. இது மதுரையில் செய்யப்பட்ட மிக அரிதான சிகிச்சைகளில் ஒன்று. மேலும் உலக அளவில் மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே, இத்தகைய அறுவை சிகிச்சைகள் கைக்குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது





மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் எம்.ஜே அருண்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது. "மூளை அனியுரிசம் (Brain Aneurysm) கட்டி என்பது இரத்தக்குழாயில் ஏற்படும் ஒரு வீக்கம். இது மெதுவாக பெரிதாகி, இறுதியில் தலையின் உட்புறம் வெடித்து உயிருக்கு ஆபத்தான கடுமையான ரத்தக் கசிவை ஏற்படுத்தக் கூடும். குழந்தைகளின் மூளையில் அனியுரிசம் (Brain Aneurysm) கட்டி ஏற்படுவது 0.5% முதல் 4.6 % வரை இருக்கலாம். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளிடம், இது மிகவும் அபூர்வமாக காணப்படுகிறது. உலக அளவில் இது 0.01% முதல் 0.09 % சதவீதம் மட்டுமே காணப்படுகிறது. இவ்வகை மூளை அனியுரிசம் (Brain Aneurysm) கட்டி வெடிக்கும் போது, நிலைமை இன்னும் மோசமாகி உயிர் பிழைப்பது மிக கடினமாகி விடுகிறது. எங்கள் மருத்துவமனையில், அண்மையில் மூளை அனியுரிசம் (Brain Aneurysm) கட்டி வெடிப்பு ஏற்பட்ட கைக்குழந்தைக்கு சிகிச்சை அளித்து, வெற்றிகரமாக காப்பாற்றி உள்ளோம். இந்த குழந்தை எவ்வாறு ஆபத்திலிருந்து மீண்டது என்பதை, உங்கள் அனைவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என தெரிவித்தார்.


கட்டுப்படுத்த முடியாத வலிப்புடன் உடல் மூட்டு மற்றும் தசைகளில் எந்த அசைவும் இன்றி, நினைவிழந்து கோமாவிற்கு சென்ற நிலையில், எங்கள் மருத்துவமனைக்கு 7.5 கிலோ எடையுள்ள ஒன்பது மாத கைக்குழந்தை கொண்டுவரப்பட்டது. மற்றொரு மருத்துவமனையில் இருந்து வெண்டிலேட்டர் உதவியுடன் நிலையற்ற ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்புடன். இக்குழந்தை எங்கள் மருத்துவமனைக்கு வந்தது. முதலில் எங்கள் அவசர சிகிச்சை குழுவினர் தந்த சிகிச்சையால், குழந்தை ஆபத்து நிலையை கடந்தது. பின் எங்களது நரம்பியல் அவசர சிகிச்சை குழுவினரால் அதன் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. குழந்தைக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் (CT Scan) மூளையில் பரவலான இரத்தக்கசிவு இருப்பதை காட்டியது.


குழந்தையின் உடல் நிலையை சீராக்கிய பின்னர், எங்கள் ஹைபிரிட் நியூரோ கார்டியாக் கேத் லேபில் (Hybrid Neuro-Cardiac Cathlab)ஜெனரல் அனஸ்தீசியா (General Anesthesia) தந்து, ப்ரெயின் ஆஞ்சியோகிராபி (Digital Subtraction Angiography - DSA) செய்ய திட்டமிட்டோம். ஆஞ்சியோகிராபி (Angiography) எடுத்து பார்த்த போது, ஒரு பெரிய சாக்குலர் அனியுரிசம் (Saccular aneurysm) மூளையில் வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த வெடிப்பு மூளையின் ஆன்டீரியர் கம்யூனிகேடிங் ஆர்ட்டரியில் (anterior communicating artery (ACOM காணப்பட்டது. மேலும் பல சிறிய அனியுரிசம்களும் உடன் இருந்தன. குழந்தையின் ஆபத்தான நிலையையும், மேற்கொள்ளப் போகும் சிகிச்சையும் பெற்றோருடன் விவாதித்த பின்னர், நியூரோ ரேடியாலஜிஸ்ட் (Neuro-radiologist) டாக்டர் விநாயக மணி, நியூரோஅனஸ்தீசியாலஜிஸ்ட் (Neuro-Anesthesiologist) டாக்டர் என் அருண்குமார் மற்றும் கேத் லேப் (Cathlab) ஊழியர்கள் உடன் இணைந்து பலூன் அசிஸ்டட் காயில்ஸ் (Balloon-Assisted Coils) பயன்படுத்தி என்டோவாஸ்குலர் (Endovascular) சிகிச்சை செய்திட தீர்மானிக்கப்பட்டது.


டாக்டர் விநாயகமணி கூறியதாவது. குழந்தையின் வயது மற்றும் குழந்தையின் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நியூரோ எண்டோ வாஸ்குலர் (Neuroendovascul) குழு, மண்டை ஓட்டை திறந்து செய்யும் ஓபன் மைக்ரோ சர்ஜிகல் கிளிப்

 (Opening the skull and microsurgically clip) முறைக்கு பதிலாக, நியூரோ எண்டோஸ்டீலர் (Neuroendovascular) மூலம் அனியரிசம் கட்டியை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தோம். இந்த செயல்முறையில் குழந்தையின் வலது தொடையில் ஒரு சிறிய துளையிட்டு (Pinhole Incision) அதன் மூலம் மூளையின் இறந்த நாளத்தை தொடர்பு கொண்டோம் மிகச்சிறிய மைக்ரோ சுத்திட்டாஸ் (Micro-Catheters)வளது பிமோரல் ஆர்ட்டரி (Right Femoral Artery) வழியாக உள்ளே அனுப்பப்பட்டு, மூளைக்கு ரத்தத்தை வழங்கும் நாளங்கள் மற்றும் அனியுரிசம் கட்டியை நோக்கி கத்திட்டர்ஸ்-ஐ செலுத்தினோம். இந்த சிறிய துளையீட்டு முறையி மூலமாக பலூன் அசிஸ்டன்ஸ் (Balloon Assistance) உடன் 5 பிளாட்டினம் ஹைட்ரோ சாஃப்ட் காயில்களை (5 platinum Hydrosoft coils) வெற்றிகரமாக உள்செலுத்தி அணியுரிசம் கட்டியை முறையாக மூடுவதோடு மேலும் இரத்தக் கசிவு ஏற்படாமல் தடுக்கவும் முடிந்தது.


இந்த செயல்முறை, குழந்தையின் சிறிய உடல் கூறு அமைப்பு காரணமாக, பெரும் சவால்களை ஏற்படுத்தியது. இதற்கு மிகுந்த துல்லியம் மற்றும் நுண்ணிய செயல்பாடுகள் தேவைப்பட்டது. மேலும் குழந்தைகளின் உடல் சிறியதாக இருப்பதால், அவர்களுக்குஅறுவை சிகிச்சை செய்யும்போது, இரத்த இழப்பு, உடல் வெப்பநிலை. ஏற்றத்தாழ்வு, மயக்க மருந்து பாதிப்பு, அறுவை சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பு ஆகியன அதிகமாக இருக்கக்கூடும்.


அறுவை சிகிச்சைக்கு பின்னர் எடுக்கப்பட்ட ஸ்கேன், குழந்தைக்கு மேலும் ரத்தக் கசிவோ, பாதிப்போ ஏற்படவில்லை என்ற சிறந்த முடிவை காண்பித்தது குழந்தை வெண்டிலேட்டர் (ventilator) உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு கை, கால்களை அசைத்து தொடங்கி சுயநினைவு வந்ததும் வெண்டிலேட்டிலிருந்து நீக்கப்பட்டது. இது நியூரோ எண்டோவாஸ்குலர் சர்ஜரி நடந்த 5 வது நாளில் நடந்தது 10வது நாளில் இருந்து வாய்வழி உணவுகள் எடுத்துக் கொள்ளத் தொடங்கி, குழந்தை விரைவாக நலம் பெற்றது. அதன் பிறகு இன்டென்சிவ் கேர் (Neuro intensive Care) யூனிட்டில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டது. 17 வறு நாளில் குழந்தை எந்த பக்கவிளைவும், குறைபாடும் இல்லாமல், வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளும் சீரான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்ப்பட்டது. கடந்த ஒரு மாதமாக குழந்தை வீட்டில் இயல்பாக இருக்கிறது. இது எதிர்காலத்தில் இத்தகைய சிகிச்சை மேற்கொள்வதற்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.


இந்த அறுவை சிகிச்சை, மூளை அனியுரிசம் வெடித்து ஏற்பட்ட கைக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான எண்டோவாஸ்குலர் (Neuroendovascular) அறுவை சிகிச்சைகளில் அரிதான ஒன்றாகும். இந்த புதுமையான அணுகுமுறை மற்றும் வெற்றிகரமான முடிவுகள், குழந்தைகள் மூளை நரம்பியல் எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சையில், நம் இந்திய நாட்டின் வலிமையை உலகிற்கு உணர்த்துவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை தருவதாக உள்ளது.

Post a Comment

0 Comments