NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் பத்திரிக்கையாளர் நல வாரியம் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அறிவுறுத்தல் படி தமிழகம் முழுவதும்  ஒரே நாளில் மாநில அளவில் கவன ‌ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். செயலர் விஜயகுமார் வரவேற்றார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தேசிய செயற்குழு உறுப்பினர் சுப்பையா பாண்டியன் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் முசிறி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




சிறப்பு அழைப்பாளர்களாக மனித விடியல் மோகன், வல்லூறு இதழ் மோகன் ராம், லட்சியம் வெல்லும் சதாசிவம், மக்கள் மகுடம் மஸ்தான் உட்பட பலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பத்திரிக்கையின் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


ஆர்ப்பாட்டத்தில் அரசியல் சிம்மம் ஆசிரியர் இந்திரஜித் பேசுகையில்...

நாடாளுமன்றம் நிர்வாகம் நீதித்துறை ஆகிய மூன்று தூண்கள் உடன் ஜனநாயகத்தை காக்கும் நான்காவது தூணாக ஊடகம் உள்ளது குறள்ளற்றவர்களின் குரலாய் சமூகம் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பையும் உண்மையை உரக்க சொல்லும் பத்திரிகையாளர்களுக்கு நலம் காக்கும் வகையில் நலவாரியம் செயல்பட வேண்டும் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கு அச்சுறுத்தலுக்கும் நெருக்கடிகளுக்கும் நடுவில் பணியாற்றும் நான்காவது தூணான ஊடகவியலாளர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் நல சங்கம் மாவட்டம் மாநகராட்சி தாலுகா போன்ற இடங்களில் பணிபுரியும் அச்சு, காட்சி, பண்பலை, இணையதள ஊடகத்தினர் புகைப்பட கலைஞர்கள் நலனிலும் அக்கரை கொள்ள வேண்டும். 



சமூகப் பிரச்சினையை செய்தியாக மக்களுக்கு கொண்டு சென்ற ஊடகத்தினர் இன்று ஊடகத்தினரின் பிரச்சனைக்காக கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

முரசொலி பத்திரிக்கை கையெழுத்து பிரதியாக வெளிவந்த வரலாறு உண்டு. ஊடகத்தினரின் வரலாற்றை அறிந்து ஊடகவியலாளரின் உரிமைகளை அரசு அனைவருக்கும் அளிக்க வேண்டும் பத்திரிக்கையாளர் இடமே அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு அடிப்படை வசதி கூட இல்லை எனவே அரசு பாரபட்சம் இன்றே அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நல வாரியம் சார்பில் தலைநகர் முதல் தாலுகா வரை உள்ள ஊடகப் பணியாளர்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்க வேண்டும் என்றார் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் செயல்படுத்து செயல்படுத்து பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்து என கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்வகுமார், கணேசன், ரவிச்சந்திரன், செந்தில்குமார், சூர்யா.

திருச்சி மாவட்ட லால்குடி தாலுகாவில் டோமினிக் கில்பர்ட், சிவசுப்பிரமணியன், மணப்பாறை தாலுகாவில் புலிகேசி ,  முசிறி தாலுகாவில் நவநீதகிருஷ்ணன் முருகன், லாரன்ஸ், ஸ்ரீரங்கம் தாலுகாவில் குகநாதன் லோகநாதன், சங்கரராமன், நரேந்திரன், பஞ்சாபிகேசன் மணி ,  துறையூர்  நாகராஜ், மணிவண்ணன், லாரன்ஸ் , திருச்சிராப்பள்ளி மேற்கு தாலுகாவில் கண்ணன், சண்முகசுந்தரம், திருச்சிராப்பள்ளி கிழக்கு தாலுகாவில் மணிகண்டன், காந்தி என காலை, மாலை நாளிதழ், புலனாய்வு, பல்சுவை, இலக்கிய பருவ இதழ்களில், வாரம் இருமுறை இதழ், வார இதழ், மாத இதழ், காலாண்டிதழ் நடத்தும் பணியாற்றும் அச்சு ஊடகத்தினர், காட்சி ஊடகத்தினர், 

இணைய ஊடகத்தினர், பண்பலை ஊடகத்தினர், ஊடக புகைப்பட, ஒளிப்பதிவு கலைஞர்கள் என பலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments