NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மாணவர்கள் பேருந்தில் எவ்வாறு முறையான பயணம் செய்யவேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை காவல்துறையினரால் நடத்தப்பட்டது

மதுரை காவல் ஆணையர் முனைவர் ஜெ லோகநாதன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி காவல் துணை ஆணையர் போக்குவரத்து வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்து பயணங்களில் செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ தொங்கி கொண்டோ செல்லாத வகையிலும்,, முறையான பேருந்து பயணத்தை மேற்கொள்ளுதல் பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.



அதன் ஒரு பகுதியாக திலகர் திடல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மணி நகரம் பகுதியில் அமைந்துள்ள மதுரை லேபர் வெல்பர் அசோசியேசன்( MLWA ) மேல்நிலைப் பள்ளியில்.. பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கும் பொழுது படிக்கட்டில் தொங்கி கொண்ட நின்று கொண்டு செல்லக்கூடாது என்றும் அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார ரீதியான உடல் ரீதியான மன ரீதியான  விபரீதங்கள் ஆபத்துகள் குறித்தும், எடுத்துரைத்து விழிப்புணர்வு வழங்கினார்.

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர் வரக்கூடிய அரசு பொதுத் தேர்வினை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுதல் குறித்தும் அறிவுரையினை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர்,  சார்பு ஆய்வாளர் லிங்க்ஸ்டன் பங்கேற்றனர்..

Post a Comment

0 Comments