மதுரையை மையமாகக் கொண்டு 1999ம் ஆண்டு முதல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்னோடி சக்தியாக செயல்பட்டு வரும் எலிசியம் குழும நிறுவனங்களின் கார்ப்பரேட் அலுவலக திறப்பு விழா மதுரை அண்ணாநகரில் 19-03-2025 அன்று நடந்தது. சுமார் 40,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை எலிசியம் குழும தலைவர் திரு.சுந்தரேஷ் காமராஜ் அவர்கள், திருமதி. தனலட்சுமி சுந்தரேஷ் மற்றும் புதல்வர்கள் சிவேஷ் சுந்தரேஷ், மிதுனா சுந்தரேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியின்போது நிறுவனத்தின் டைரக்டர் டாக்டர் முத்துமாரி அய்யாக்கண்ணு, நிர்வாக உறுப்பினர்கள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து எலிசியம் குழுமத்தின் 25வது ஆண்டு விழா மற்றும் பணியாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் டிஜிட்ஆல் அமைப்பின் தலைவர் திரு.ஜே.கே.முத்து, யு எக்ஸ்போர்ட் தலைவர் திரு.திருப்பதிராஜன் மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், ஜேசிஐ, சிஐஐ, சிடா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவின்போது சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.
புதிய அலுவலகம் திறப்பு குறித்து எலிசியம் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சுந்தரேசன் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
1999ம் ஆண்டு முதல் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலிசியம் நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. தற்போது புதிய அலுவலகம் திறப்புடன், மைல்கல் சாதனையாக எலிசியம் குரூப்ஸ் ஆஃப் கம்பெனிகள் (இஜிசி) மற்றும் எலிசியம் இன்டலிஜென்ஸ் பிசினஸ் சொல்யூஷன்ஸ் (இஐபிஎஸ்) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தை செய்துள்ளோம். நாங்கள் 6 பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் மூலம், ஏறக்குறைய 100 நாடுகளுக்கு மேல் சாப்ட்வேர் மற்றும் தொழில் நுட்பத் தீர்வுகளை வழங்கி வருகிறோம்.
பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், வாய்ப்புகளை விரிவாக்கம் செய்யவும் தற்போது டேடலஸ் ஹப் (Daedalus Hub) என்ற பெயரில் இன்குபேஷன் சென்டர் ஒன்றையும் நிறுவியுள்ளோம். மதுரையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலும், புதிதாக தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும் இந்த இன்குபேஷன் மையம் செயல்படவுள்ளது. நல்ல புத்தாக்க படைப்புகளுக்கு நிதி உதவியும் செய்ய முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஏற்கனவே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் இருப்பதால், இந்த மையமும் ஏஐ மற்றும் ஐஓடி ஆகியவற்றை மையப்படுத்தி செயல்படும். தென்னிந்தியாவின் முதல் ஏஐ இன்குபேஷன் சென்டர் இதுவாகும்.
தற்போது எலுசியம் குழும நிறுவனங்களில் 250 பேர் பணியாற்றி வருகிறார்கள். 2026ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 700 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். புதிதாக திறக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் அலுவகத்தில் 450 பேர் வரை அமர்ந்து பணியாற்றலாம். இந்த அலுவலகத்தில் பணியாளர்களுக்கு தேவையான தேநீர், உணவு, உடற்பயிற்சி, காட்சிக் கூடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். எங்களது பணியாளர்கள்தான் எங்களது சொத்து என்கிற தாரக மந்திரத்தோடு செயல்படுவதால் பணியாளர்கள் ஏராளமான புதிய நிறுவனங்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். டாடா போன்ற பெருநிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இணையாக எங்கள்து பணியாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுத்து, நல்ல பணிச்சூழலை உருவாக்கியுள்ளோம் இவ்வாறு திரு,சுந்தரேஷ் காமராஜ் கூறினார்,
பேட்டியின்போது நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் யு.சங்கர் கணேஷ், கே.அருண்குமார் மற்றும் டாக்டர் ஆர்.ஏ.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments