NEWS UPDATE *** ``தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி பேச்சு *********** முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் ஏப்.2ம் தேதி தீர்ப்பு என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரையில் பள்ளி கல்வித்துறை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் துவக்கம்

 பள்ளி கல்வித்துறை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம்   துவக்கம்.



தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய சிறை மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத  சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம்  தொடங்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  இந்த சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் துவங்கப்பட்டு  96 ஆண்  சிறைவாசிகளும்,  பெண்கள் தனிச்சிறையில்  40 பெண் சிறைவாசிகளும் கல்வி பயின்றனர். 

தற்போது ஆறுமாத கால பயிற்சி  முடிவடைந்த நிலையில்  அடிப்படை எழுத்தறிவு  தேர்வு மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்றது.

இத்தேர்வு மையத்தினை மதுரை சரகர் சிறைத்துறை துணை தலைவர்  முருகேசன் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர்  மு.சதீஷ்குமார்,  தொடக்க கல்வி அலுவலர் கணேசன். ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆகியோர் பார்வையிட்டு தேர்வினை துவக்கி வைத்தனர்

Post a Comment

0 Comments