NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

மதுரை மாநகர் வர்த்தக தொழில் மைய வளாகத்தில் தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை 2025 ம் ஆண்டின் மகளிர் திருவிழா !

 மதுரை மாநகர் வர்த்தக தொழில் மைய வளாகத்தில் தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை 2025 ம் ஆண்டின் மகளிர் திருவிழா நடைபெற்றது. 



நாள்தோறும் ஆயிரம் நபர்களுக்கு அன்னமிட்டகை அன்னதான பிரபு குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குருசாமி அவர்களுக்கு  மகளிர் தின விழாவில் மனிதநேய செம்மல் விருது கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் நிறுவனரும் தலைவியும் ஆன விஜய பாரதி அவர்கள் வழங்கினார் மேலும் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்டம் மற்றும் அமர்வு நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, காவல் துணைக் கண்கானிப்பாளர் பொருளாதார குற்றப்பிரிவு திருச்சி லில்லி கிரேஸ் மதுரை மாவட்ட சமூக நல அலுவலர் திலகம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் துணை ஆட்சியர் செய்யது முகம்மது, கேட்வே ஹவுசிங் (பி) லிமிடெட் முருகன், லெட்சுமணா மல்டி பெஷாலிட்டி மருத்துவமணை நிர்வாக இயக்குநர் சாந்தி, பொன்னி மருத்துவமனை யாழினி செல்வராஜ். RSMP பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கம் மாநில தலைவர் நாகலிங்கம் Asia Foundation சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குற்றபிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா. இந்திய வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சாமிதுரை அவர்கள், ஸ்ரீ மதனகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழு Ex தலைவர் பால தம்புராஜ் தமிழ்நாடு வணிகள் சங்கங்களின் பேரவை மதுரை மாவட்ட தலைவர் ராஜ பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்கள் இவ்விழாவில் கலந்து கொண்ட . அனைவரையும் தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் மற்றும் அக்னி சிறகுகள் பவுண்டேசன் தலைவி செயலாளர், நிறுவனர் டாக்டர் விஜய பாரதி அவர்கள் வரவேற்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 2025 ஆண்டின் சிங்க பெண் விருது களாக காவல் துறை, சிறந்த நல்லாசிரியர், மாமன்ற உறுப்பினர் தேசிய பழுதூக்கும் வீராங்கனை மருத்துவ சேவை தோல் மருத்துவம் சிறந்த கட்டிட கலை தொழில் அதிபர்கள் பெண்கள் சமூக நல அமைப்பு. சமூக சேவை, பரதநாட்டியம் கலை, பெண் யூடி பர், தன்னம்பிக்கை நாயகி கிராமிய சிலம்பாட்ட கலை இலவசம் சிலம்பம் கை தொழில் முனைவர் பாடல் ஆசிரியர் மற்றும் ஆர்கெஸ்ட்ரா போன்ற தொழிலுக்கான சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கபட்டு கெளரவிக்கப்பட்டது .

மேலும் சிறுமிகள் கலை நிகழ்ச்சி, நடனம், கராத்தே போட்டிகள் நடைபெற்றது . தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸட் இராம ஜெயந்தி சண்முகம் அவர்கள் நன்றியுரையாற்றினார்

Post a Comment

0 Comments