NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு மற்றும் வெயிலை தாங்கும் தொப்பிகளையும் வழங்கினார் மாநகர காவல் ஆணையர் காமினி

 

திருச்சியில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும் போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று காலை  டிவிஎஸ் டோல்கேட் பாலத்தின் கீழ் தொடங்கி வைத்தார்.



 

இந்த நிகழ்வில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் ஈஸ்வரன், சிபின் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 244 போக்குவரத்து காவலர்களுக்கு மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Post a Comment

0 Comments