NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாநகராட்சி முன் அமமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் !

 





திருச்சி மாநகராட்சி முன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும் மக்களுக்கு முறையான சுத்தமான குடிநீர் வழங்காமல் தரமற்ற குடிநீரை விநியோகித்து மக்களை கொல்வதை தடுத்திட வேண்டும், வார்டுகள் தோறும் தரமற்ற கலங்கலான குடிநீர் வழங்காமல் புதிய குழாய்கள் அமைத்து, சுத்தமான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் திருச்சி மாநகராட்சியை கண்டித்தும், மந்தகதியில் நடைபெற்றுவரும் திருச்சி மாரிஸ் தியேட்டர் மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகள் மரக்கன்றுகள் நடவும் இயற்கையை மேம்படுத்தவும் வலியுறுத்தும் வகையில் பஞ்சப்பூரில் மக்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட பசுமை பூங்காவை அழித்து புதிதாக மார்க்கெட் அமைப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி தலைமையில், தலைமைநிலைய செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் ராமலிங்கம், மாவட்டத் துணைச்செயலாளர் தன்சிங், பகுதி செயலாளர்கள் வேதாத்திரி நகர் பாலு, கல்நாயக் சதீஷ்குமார், பொன்மலை சங்கர்,வெங்கட்ரமணி,மதியழகன்,ஐடி பிரிவு தருண்,வர்த்தக பிரிவு செயலாளர் ராஜா ராமநாதன்,பேரவை பெஸ்ட் பாபு, கென்னடி மற்றும்

பொதுக்குழு உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி உள்ளிட்ட மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், வட்டச்செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர் 



Post a Comment

0 Comments