NEWS UPDATE *** தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்! ➛ அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு. ➛ நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார்! ➛ துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ➛ இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார்! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி திருவானைக் கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28 வது ஆண்டு விழா

 

திருச்சி திருவானைக் கோவில்  ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28 வது ஆண்டு விழா நடைபெற்றது . 



















ஆண்டு விழா  ,கலை விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று ஏப்ரல் 5ஆம் தேதி     கல்லூரியில் உள்ள அரங்கத்தில்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகம்     மற்றும்  குடிநீர்  வழங்கல்   துறை                  அமைச்சர்    கே .என்.நேரு  கலந்து கொண்டு  கல்வி, கலை, விளையாட்டு .,ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கிய 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி  சிறப்பித்தார் .

விழாவில் அமைச்சர் கே.என். நேரு அவர்கள் சிறப்புரை ஆற்றும் போது மாணவர்கள்" கல்வி மற்றும் பல்துறைகள் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொண்டால் அதன  அடிப்படையில் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றி நிச்சயம் பெற முடியும்," என்பதை மாணவர்களுக்கு கூறி வாழ்த்துரை நிகழ்த்தினார் . 

முன்னதாக கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர்  திரு.C.A.ஆர்.வெங்கடேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.. கல்லூரியின் முதல்வர் முனைவர் M. பிச்சைமணி ஆண்டு அறிக்கையை வாசித்தார். அதனைத் தொடர்ந்து  மாணவர் பேரவைத் தலைவர் M. அரவிந்தன் சிறப்புரை நிகழ்த்தினார். விழாவின் நிறைவில் மூத்த துணை முதல்வர் முனைவர் ஜி.ஜோதி நன்றியுரை ஆற்றினார. 

துணை முதல்வர்கள், மற்றும் புல முதன்மையானவர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மேலும் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் C.A .வெங்கடேஷ் அவர்கள் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் ஆண்டவர் கல்லூரிக்கு கே.என்.நேரு அவர்கள் அமைச்சராக, இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக  பணியாற்றினாலும் எங்கள் கல்லூரிக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து , கிராமபுற மாணவ, மாணவர்களின் கல்வித்தரம் உயர பல வழிகளில் உதவி செய்ததாகவும் கூறினார். தாங்கள் கல்லூரியில் பணிபுரியும், அனைத்து கல்வி பேராசிரியர்கள் , நிர்வாகிகள் அனைவரும் , மிகுந்த  ஈடுபாட்டுடன் பணிபுரிவதாக பெருமிதத்துடன் தெரிவித்து அனைவருக்கும் நன்றி  கூறினார்.

Post a Comment

0 Comments