மதுரை மாவட்ட மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து காவல்துறையினர் உட்பட 500 காவலர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.
எலிக்ஸிர் பவுண்டேஷன் மற்றும் டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த 12,000 ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி மதுரையில் 3000 ஹெல்மெட் வழங்கப்படுகிறது இதன் முதல் நிகழ்வாக 500 ஹெல்மெட் காவலர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் போக்குவரத்து வனிதா, மதுரை மாநகர கூடுதல் காவல்துறை ஆணையர் போக்குவரத்து திருமலை குமார், உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின்,போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் ரமேஷ் குமார் நந்தகுமார் சோபனா பஞ்சவர்ணம் பூர்ணகிருஷ்ணன் சுரேஷ் தங்கப்பாண்டி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் ஆகியோர் தலைமையில் ட்ரூம் பைனான்ஸ் சார்பில் ஸ்டேட் ஹெட் ராகவன், எலிக்சர் பவுண்டேஷன் சார்பில் கார்த்திக், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments