குவைத்தின் Mahboula பகுதியில் தனியார் நிறுவனம் வழங்கியுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்தவர் (03/04/25) மரணமடைந்தார். அவர் பெயர் ஃபாரூக் எனவும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. உயிரிழந்த ஃபாரூக் அல்கொரியேஃப் பெட்ரோலியம் நிறுவனத்தின் கிழ் பணிபுரிந்து வந்தார்.
காலையில் வழக்கம் போல் வேலைக்காக செல்ல கழிவறைக்கு சென்றவர் அங்கேயே மரணமடைந்துள்ளார் மாலையில் உடன் வேலை செய்து வருகின்ற சக தொழிலாளர் அறைக்கு வந்த பிறகு தான் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
முதல்கட்ட தகவல்படி மரணத்துக்கு காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ் மக்கள் சேவை மையம் அலிபாய் மற்றும் தமுமுக அவர்கள் உடலைப் பெற்றுக் கொண்டு குவைத்தில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று (6.4.25)அதிகாலை அனுப்பி வைத்தனர்.
திருச்சி கிழக்கு தமுமுக மமக மாவட்ட தலைவர் M.A. முகமது ராஜா பரிந்துரையில் , மாவட்ட துணை செயலாளர் ரம்ஜான் அலி, பூக்கொல்லை மு.சையது முஸ்தபா, ஆம்புலன்ஸ் டிரைவர் சாகுல், எருமைப்பட்டி ஜாபர், இக்பால் ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் உடலை பெற்றுக் கொண்டு, குடும்ப உறவினரிடம் ஒப்படைத்தனர்.
0 Comments