NEWS UPDATE *** MLA பதவியை ராஜினாமா செய்தார்.. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய இறுதி கட்ட பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் அவர்கள் வரும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.




இதையொட்டி அங்கு நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகளையும், அரசு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளையும் இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அதனை அவ்வப்போது கண்காணிக்கவும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.





இந் நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாநகர மேயர் அன்பழகன் அவர்களுடன் அரசு அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments