தமிழக முதல்வர் மு .க . ஸ்டாலின் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் ஒன்பதாம் தேதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் நகரப் பொறியாளர் சிவபாதம் பாலசுப்பிரமணியன் மாநகராட்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்
0 Comments