மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சு பணியாளர்களின் வாழ்க்கை தரம் மேம்படவும் துறையில் பதவி உயர்வு பொதுநிலை பட்டியல் வெளியிடுதல் தோட்ட கணக்கர் பதவி மாநில சேவையாக்கப்பட வேண்டுதல் முறையில் மாறுதல் வழங்கி காலி பணியிடங்கள் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தின் திறப்பு விழா மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெறுகிறது.சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் செல்வராஜன் ரமேஷ் கண்காணிப்பு பொறியாளர் அய்யாசாமி நீர்வளத்துறை முதன்மை பணியாளர் அலுவலர் சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
0 Comments