திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சிராஜுதீன் தலைமையில் 17.06.25 நடைபெற்றது.
மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுஜாதா தலைமை காவலர் கனிமொழி மற்றும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சந்திரசேகர் மேலாளர் சந்துரு ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு குழந்தைகள் என்பவர் யார் குழந்தைகள் மீதான வன்முறைகளான குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்தல் குழந்தை தொழிலாளர் முறை குழந்தை திருமண தடுப்பு, பாலியல் வான்முறை மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் உடலளவில் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.


0 Comments