ஈரோட்டில் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஜூலை 17 ஆம் தேதி சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


0 Comments