NEWS UPDATE *** ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு – அண்ணாமலை ……! *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

 குடியரசு தின விழா - 2026

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார்,  குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து, 30 பயனாளிகளுக்கு ரூபாய் 61.93 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




தொடர்ந்து 103 மாவட்ட காவல்துறை,182 மதுரை மாநகர் காவல்துறை என மொத்தம் 285 காவல்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கினார்.


மேலும் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதல் நிலை அலுவலர்கள், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 333 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

Post a Comment

0 Comments