திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் "இந்திய ஜனநாயகப் புலிகள்" (IJP) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் லால்குடி சட்டசபை தொகுதியில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக களமிறங்குகிறார். இந்த தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் இன்று பிரச்சாரம் செய்த போது திடீரென கல்லக்குடி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். உடனே போலீஸார் பதறி போய் என்னவென கேட்க, "எனக்கு கருணாநிதி நினைவு வந்துவிட்டது. அதனால் இந்த தண்டவாளத்தில் படுத்தேன்" என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் 1953 ஆம் ஆண்டு நடந்தது. கருணாநிதியால் முன்னெடுக்கப்பட்ட முக்கிய போராட்டமாகும். இந்த ரயில் நிலையத்திற்கு டால்மியாபுரம் ரயில் நிலையம் என பெயர் மாற்றத்தை கண்டித்தும் கல்லக்குடி என மாற்றக் கோரியும் கருணாநிதி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments