NEWS UPDATE *** அசாமில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1250-ல் இருந்து 3,000ஆக உயரத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து பேசினார். 



இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அவர், “திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். நான் மீண்டும் மீண்டும் திருச்சி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்றாலும் மீண்டும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும். நான் இந்தளவுக்கு உரிமையோடு சொல்ல காரணம், இந்த திருச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு விதமான முத்தான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செய்துக் கொடுத்திருக்கிறது. நேரமில்லை காரணத்தால் அவை எல்லாவற்றையும் என்னால் சொல்ல முடியவில்லை. அதில் சிலவற்றைக் கூறுகிறேன்.




பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்கள் கூட ஒரு பேருந்து நிலையம் விமான நிலையத்தை மிஞ்சும் வகையில் இருக்கிறது என பாராட்டும் வகையில் வீடியோ பதிவிடும் வகையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம், அதன் அருகிலேயே பேரறிஞர் அண்ணா சரக்கு வாகன முனையம், திருவரங்கம், லால்குடியில் புதிய பேருந்து நிலையம், 327 கோயில்களுக்கு குடமுழுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்ட இந்த இந்த மாவட்டத்தில் இரண்டு மாதிரி பள்ளிகளை அமைத்துக் கொடுத்துள்ளோம்.


இந்த மாவட்டத்திற்கு மட்டும் 9 கூட்டு குடிநீர் திட்டம், 18 மறுசீரமைப்பு குடிநீர் திட்டங்களையும் செய்து கொடுத்திருக்கிறோம். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மினி ஸ்டேடியம், ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. சமயபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் தங்கத்தேர் உலா, மணப்பாறையில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.


திருச்சிக்கு அறிவிக்கப்பட்ட முத்தான திட்டங்கள்


தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தொடக்கத்தில் திறந்து வைக்கப்படுகின்ற திட்டங்களை தெரிவிக்கின்றேன். பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமையப்பெறும் பிரமாண்ட நூலகம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இடம்பெறுகிறது. பஞ்சப்பூரில் டைடல் பூங்கா, சூரியூரில் 48.87 ஏக்கர் பரப்பளவில் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் விளையாட்டு அகாடமியை திறந்து வைக்க உள்ளோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாம் போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments