NEWS UPDATE *** பணிச்சுமை என நெல்லை மாநகர காவல் ஆணையாளருக்கு ஆடியோ அனுப்பிய தலைமைக் காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சி மாவட்டம் எசனைகோரை கிராமசபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம் ! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ???

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்காவில் உள்ள எசனைகோரை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் எசனைகோரை சமுதாய நலகூடத்தில்  15/08/2023 தேதியன்று நடைபெற்றது


 . 

இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி .சாந்தி  தலைமை வகித்தார் . ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ,எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமாவளவன் ,அரசு அதிகாரிகள், அக்னி சிறகு பத்திரிகையின் ஆசிரியர் முகமது இக்பால் உள்பட பலர் கலந்துகொண்டனர் .



அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு , குப்பைகள் அகற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது . எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்யாத ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் போக்கை கண்டித்து புது தெருவை சேர்ந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர் . 

ஒவ்வொரு கிராமசபை கூட்டத்தின்போதும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை , சுமார் 1500 நபர்கள் இருக்கும் மக்கள் தொகையில் 100 நபர்களுக்குகுறைவாக மக்கள் பங்கேற்கின்றனர் ,  மேலும் கூட்டத்தை அடிக்கடி சமுதாய நலக்கூடத்தில் மட்டுமே  நடத்துகிறார்கள் , சுழற்சி முறையில் இடத்தை மாற்றி நடத்துவதில்லை , அடிப்படை வசதிகளான குப்பைகளை அகற்ற முயற்சி செய்வதில்லை  , மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கு விண்ணப்பித்து இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை பலபேருக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது போன்ற பல கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை . இதில் ஹைலைட் என்னவென்றால் கேட்கின்ற எந்த கேள்விகளுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சாந்தி பதில் சொல்வதில்லை அதற்க்கு பதிலாக ஊராட்சி மன்ற செயலாளர் முருகானந்தம் மட்டுமே பதில் சொல்கிறார் . எதுவுமே தெரியாமல் இருக்கும் இவருக்கு ஏன் தலைவர் பதவி என்பது பொதுமக்களின் ஆதங்கமாகவே உள்ளது .

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா  என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு ?

---













Post a Comment

0 Comments